Poem of the day

மனிதம் வெல்லும்

நீதி செத்துப் போனதென்று
நிலமகளும் வருந்துகின்றாள்
நாதியற்ற நாங்கள் மட்டும்
நடுத்தெருவில் வாழுகின்றோம்

புரட்சி கவிதை Inthiran 14, October 2017 More

Latest Poems

சிவராத்திரி

படைத்தவனிடமே தொடக்கம்
நீயா... நானா.
இல்லையில்லை
நானேதான்
இறுமாப்பின் எதிரொலி.
உரிமை மறுப்பு...
தனியாட்சி...
ஆட்சி மோதல்...
பொய்ப்பிரச்சாரம்...
போர்....
இன்னும் இன்னும்...
நடப்பு கவிதை ஹேமா 06, March 2008 More

"சாம்பியனை" சாய்த்துவிட்டோம்

நாங்கள் தான் என்றும்
உலக சாம்பியன் என்று
மார்தட்டிக்கொண்ட கங்காருக்களை
அழ்துவும் அவர்தம் சொந்த மண்ணில்
சாய்த்து வீழ்த்திவிட்டோம்.

நெஞ்சுரம் என்பது
உங்களுக்கு மட்டும்தான்
உரியதா...?
இந்தியன் என்றுமே
எவனுக்கும் சளைத்தவன் இல்லை
என்று நிரூபித்தது
போதுமா கங்காருக்களே
ஏனையவை தங்கவேல் 06, March 2008 More

திருத்தி எழுதப்படவேண்டும்

பெரும்பான்மை
பெறவேன்டும் அதிகாரம்
என்பதனை
அடிமை சாசனமென்று
அறிவிக்க வேண்டும்!

சாதி மத மொழிகளை
சதுரங்க காய்களாக
நகர்த்தினால் அரசியலில்
நாசமாகிவிடும் நாடு!
ஏனையவை வே. குமாரவேல் 06, March 2008 More

என் உயிர்

உன் அன்பே.
என் வெளிச்சம்

உன் காதல்
எனக்கு காவல்

உன் பேச்சு..
எனக்கு..இன்பம்
காதல் கவிதை ஜெகன் 06, March 2008 More

கற்பனைக்காதல்

மங்கள ஓசைகள் கேட்டன காதில்
மங்கை அவள் வருகை தெரிந்தது மனதில்
வந்த அவள்- பார்த்தது பார்வை
மார்பினுல் ஏதோ அடித்தது ஓசை!

சில்லென மயிர்கள்
சிலிர்த்தன உடலில்
பட்டென மனதில் படபட ஏக்கம்
சட்டென உடலே நனைத்தது வியர்வை!
காதல் கவிதை அ.கோநீலன் 06, March 2008 More

நீ

நிலவு காயும் நிசப்தத்தில்
மெல்ல வரும் மெல்லிசை நீ
மார்கழி மாத குளிரில்
இளஞ்சூட்டு கதகதப்பாய் நீ

கோடை கால கொப்பளிப்பில்
குற்றால அருவியாய் நீ
பாலைவன பயணத்தில்
பருக கிடைத்த பதநீர் நீ
காதல் கவிதை திவி செல்வராஜீ 05, March 2008 More

எனது காவியம்

நம் புதிய வாழ்கையை ஆரம்பிக்க உன்
பிறந்த மண்ணுக்கு புறப்படும் முன்
இறுதி ஊர்வலத்துக்கு தயாராகிவிட்ட
என் இனியவளுக்கு

என்னை விட காலன் உன் மேல் அதிக
காதல் வைத்து விட்டான் போலும்
அதனால்தான் அவசரமாய்
அணைத்துக்கொண்டான்
காதல் கவிதை செள. ரவீந்திரன் 05, March 2008 More

அகதி...

குளிர்ந்து விறைத்த
இரவுக்குள்
உறைகளுக்குள்
புதைந்து கிடக்கின்றன
கைகளும் கால்களும்.
மனம் மட்டும்...
என் மண்ணில்
நேசித்த மனிதர்கள்...
ரசித்த பொழுதுகள்...
மண் குடிசைகள்...
கோவில்கள்...
வாழ்வின் மீதான
நிரம்பிய காதல்...
நடப்பு கவிதை ஹேமா 05, March 2008 More

சந்தேகக் கோடு அது சந்தோசக் கேடு

காதலி மீது
சந்தேகம் கொள்பவன்
தன் மீது
நம்பிக்கை இல்லாதவன்.

காதல் கருவறையில்
காதல் விதை விதைத்தபின்
இடையில்
கருக்கலைப்பது
அவனது இயலாமை தானே!
காதல் கவிதை கவியழகன் 05, March 2008 More

மண்ணில் பிறவாவரம் கேட்டேன்

மரமாய் பிறந்து இருந்தால் கூட
மௌனம் காத்திருப்பேன்
மனிதர் தறிக்க வாழ்வை முடித்து
மண்ணில் மடிந்தருப்பேன்

மங்கையாய் பிறந்தே விட்டதனால்
மனமே வெதும்புகின்றேன்
மர்மம் நிறைந்த வஞ்சக மனங்களை
கண்டே அஞ்சிநின்றேன்
ஏனையவை அம்பிகா 05, March 2008 More