Poem of the day

தனிமையின் முதுமை

நெஞ்சில் பாசத்தை வைத்து 
நெருப்பை தான்  அள்ளி வைத்தது போல
பிள்ளைக்காக அன்பை பாய்ச்சி  
தன் இளைமையையும் இழந்து விட்டு

ஏனையவை கலையடி அகிலன் 16, September 2017 More

புரட்சி கவிதை

ஆறாத வலிகளும் அழியாத வடுக்களும்..

சாந்தனேஷ்
18, May 2017
Views 792

வேலியிலும், கிளையிலும்
அங்கும், இங்குமாய்
சிதறுண்ட அங்கங்கள்
அங்காங்கே தொங்கின..
ரத்த ஆற்றில் ஊரே குளித்தது..
சுடுகாடு பிணம் வீட்டில் கருமாதி நடந்தது..
உயிரது இங்கே மலிவாய் போனது..
ஊரே இங்கு சுடுகாடாய் ஆனது....
பாட்டினிச்சாவால்
எம் உடல் நுளம்பாய் கனத்தது..
தவிடே  இங்கு உணவாய் ஆனது
அதுவும்
சிலநாளில் முடிவானது..

அடிவயிறு எரிபொருளின்றி
கொழுந்து விட்டு எரிந்தது..
கொத்து குண்டுகளால்
கத்தை, கத்தையாய் - எம்
பிணங்கள் வீழ்ந்தது..
பல்குழல் எறிகணை - எம்
செவிப்பறையை கிழித்தது..
கணத்துக்கு, கணம்
பதற வைத்தபடி உயிர் மூச்சோடிக் கிடந்தது..

மண்டை பிளந்தது..
கை, கால்
கண்டபடி தெறித்தது..
வயிறு கிழிந்து
குடல் தொங்கி
தெரு நாய் பிணமாய்
உடலை ஈக்கள் மொய்த்தது..
ஊனுக்குள் உருகி, உருகி
உறவுகள் உருக்குலைந்து போனது..

ஊரோடு அழிக்க
எமன் கூட்டமாய் வந்தான்..
கொத்து குண்டுகளால்
குதறி எறிந்தான்..

வானம் கூட
குண்டுகள் வீச - எம்
பச்சை குஞ்சுகள்
பலியடைந்து போயின..
பொல் ஊன்றும் பாட்டனாரின்
காலும் ஒடிந்து போனது..
கன்னிகள் கற்பை
காடையர்
கசாப்பு கடையேற்றி கும்மாளமிட்டது..
மனிதம் உலகில்
செத்து கிடந்தது..

காய்ச்சிய பானை
கவிழ்ந்து போயிருக்க..
சோற்றில்
கை வைக்கையில்
வயிற்றில் குண்டுகள் நிறைந்தன..

மாதர்
மார்க்குடங்கள் அரிபட்டு பச்சை பாலகன்
மண்ணை அள்ளி உண்டது..

டயர் குவியலோடு
உன் உடல் உயிரோடு தீய்ந்தது..
கைகளோடு, கண்களையும் கட்டி
தெரு நாயாய்
உன்னை சாத்தான்கள் சுட்டது..

மூச்சு முட்ட
இருதயம் வேகமாய் துடித்தபடி,
மூளை கொதித்து
என்ன செய்வதென்று அறியாது
பைத்தியம் பிடித்தது..

நம் ஒப்பாரி ஓலம்
விண்ணையும் கிழித்தது..
வெண்வெளி போகும் உலகம்
வேடிக்கை பார்த்தது.


கோடி யுகம் போனாலும்.
கொடூரங்கள் மறைந்திடாது,
முற்றத்தின் முன்றலில்
கோலமது போட்டாலும்
கண்ணுக்குள் வரும்
கொத்து குண்டுகளால்
சிதைந்த எம் உறவுகளின் ரத்த கறை.