காதல் கவிதை

கள்வனே

தீனு
22, September 2013
Views 1352

கடந்த இரவுகளில்தான்
களவு போனேன்
கண் இமைகள் தாண்டியும்
எப்படியடா வந்து போனாய்...

சிந்தையில் உன் நினைவுகள்
தேங்கியே கிடக்கின்றன
தடுமாறும் என் மனம்
நீ பேசத் தயங்கும் போதெல்லாம்

விரல் தொடும் தூரம் உன்
நீ இல்லையெனினும்
காற்றையும் விஞ்சுகிறது என் காதல்
உன்னைத் தேடி..