காதல் கவிதை

காய்ந்துபோன காவிரி

ரதிவர்மன்
05, March 2013
Views 885

நான் அழுவதே தெரியாமல்
நீ சிரித்துக்கொண்டிருக்கிறாய்
என்னை நீ
பரிகசிக்கிறாயா?

இன்றைய உலகில்
நொன்டி குதிரையாய்
மட்டுமே நம்பி நான்
தூரதேசம் புறப்பட்டிருக்கிறேன்

கொஞ்சம் சிரிப்பதை
நிறுத்திவிட்டு- என்
புலம்பலை கேட்கமாட்டாயா!
என் வாழ்க்கை

காய்ந்து போன காவேரி
இந்த ஆற்றை நம்பி
எப்படி நீ
விதை விதைத்தாய்

நானொரு வறண்டு போன
சகாரா தேசம்
எந்தன் கால்களை நீயோ
பச்சை குழுங்கும்

வனாந்திரத்தை நோக்கி
செலுத்த சொல்லுகிறாய்
இது நடக்கின்ற காரியமா?
இந்த இயந்திரங்களின்

ஓசைகளில்
என் சப்தம் உனக்கு கேட்கிறதா!
கேட்காவிடில்
நானொரு துர்பாக்கியசாலி.