Latest Poems

எங்கள் அண்ணன் பிரபாகரன்

யாருக்கும் தலைவனங்கா தலைவன் அவன்
தமிழ் ஈழத்தில் பிறந்திட்ட தமிழன் அவன்
புலிப்படை நடத்தும் தமிழ் புதல்வன் அவன்
ஏதிரியை வீழ்த்திடும் வீரன் அவன்
புரட்சி கவிதை கவிதை 28, November 2007 More

எங்கே மனிதம்?....ஏங்குகிறேம் நாம் மனிதர்!

எங்கே மனிதம் எங்கே மனிதம்
ஏங்குகிறேம் நாம் மனிதர்

மனதில் மிருகம் வளர்த்து மனிதர்
மனிதம் கொன்று வாழ்கின்றோம்
புரட்சி கவிதை தர்மரத்தினம் 28, November 2007 More

துயிலுமோ கண்கள்

மண்ணைக் காப்பதற்காய் மண்ணுக்கே உரமாகி
கண்ணுக்குள் தமிழீழக் கனவுகளைத் தான் சுமந்தீர்
விண்ணுக்குள் விரித்திருக்கும் மாவீர வேங்கைகளே - உம்
எண்ணங்கள் இனிதாகித் தமிழீழம்தான் மலரும்
புரட்சி கவிதை பாரதி 28, November 2007 More

மாவீரர்கள்..........!!

தமீழீழ விடிவிற்காய் நும் விடியலை துறந்து
தமிழருக்காக விடியலை தேடிய
உன்னதமானவர்களே!
எம் உதட்டில் பூக்கும்
புன்னகைமலரிற்காக உயிர்துறந்த
உங்களுக்கு மலர்தூவும் நேரம் இது!!
புரட்சி கவிதை ஜமுனா 27, November 2007 More

நிமிடத்து வாழ்வோடு

மறந்தால்தானே
நினைப்பதற்கு...
எம் வாழ்வே நீங்களாய்
நிறைந்திருக்கும்போது
மறத்தல் எப்படி?
ஈழத்தாயின் கழுத்தில்
கார்த்திகை மலர்
மாலையாய்
என்றுமே நீங்கள்தானே.
புரட்சி கவிதை ஹேமா 27, November 2007 More

விடிவெள்ளி வீழ்ந்தது

தமிழீழ வானத்தில் ஒளிவிட்ட விடிவெள்ளி
திசை காட்டும் முன்பு தீயாகிப் போனதென்ன?
விடியலைக் காட்டவென கூவவிழைந்த குயில்
கடிதாய் சிறகொடிந்து மண்ணில் வீழ்ந்ததென்ன?
புரட்சி கவிதை சரஸ்வதி 26, November 2007 More

செத்து மடிந்தது போதுமடா

உலகத் தமிழினம் உறைந்தது ஒருகணம்
ஊமை விழிகளும் உற்றங்கு பார்த்தது

புலரும் பொழுதினில் புத்தனின் தத்துவம்
போட்டது குண்டினை புறா அங்கு வீழ்ந்தது

புரட்சி கவிதை தர்மரத்தினம் 25, November 2007 More

அழகு ரோஜாவே....

ரோஜாச்செடி போலவேதான்
உறவுகள் என்றெண்ணி
உறவுகளை விலத்தியிருந்த
என் வாழ்வில் நுழைந்தாய்
முட்களற்று வாசனை நிரம்பிய
அழகு ரோஜாவாக...
காதல் கவிதை ஜமுனா 25, November 2007 More

அன்பு...

ஆறறிவு படைத்த

ஒவ்வொரு ஜீவனும்

இதற்காதத் தான் ஏங்குகிறது

ஆனால்………
நடப்பு கவிதை சந்தியா 25, November 2007 More

நிம்மதி

மானிடமே தாகத்துடன்

ஏங்குகின்றது

இதைத்தேடி….

எங்கெங்கோ எல்லாம்

அலைகின்றது
நடப்பு கவிதை சந்தியா 25, November 2007 More