Poem of the day

தனிமையின் முதுமை

நெஞ்சில் பாசத்தை வைத்து 
நெருப்பை தான்  அள்ளி வைத்தது போல
பிள்ளைக்காக அன்பை பாய்ச்சி  
தன் இளைமையையும் இழந்து விட்டு

ஏனையவை கலையடி அகிலன் 16, September 2017 More

புரட்சி கவிதை

தகைசான்ற எம்மீழத் தலைவா..!

26, November 2015
Views 2066

காலத்தின் சிறையினிலே தமிழர் மாண்பும்
காயங்கள் பலகண்டும் கண்ணீர் இன்றி
ஆலைக்குள் அகப்பட்ட கரும்பைப் போலும்
அன்றாடம் துயர்கொண்ட வாழ்வைப் போக்க
ஞாலத்தின் சூரியனாய் வல்வை மண்ணில்
நியாயத்தைக் பெற்றிடவே பிறந்த வீரன்
ஆலயத்தில் வாழ்விறையின் அருளைப் பெற்றே
அவனிக்கோர் புதுமறையை அளித்த வள்ளல் !

சோலைவயல் பூகனிகள் சுருதி சேர்க்கச்
சுடர்தமிழும் தடையின்றிச் சுகந்தம் பாடக்
காலையிளங் கதிரொளியாய்க் கல்விச் செல்வம்
கடைப்பிடிக்கும் விழுமியங்கள் காற்றும் கொஞ்சும்
சாலைநிழல் தருங்கிளைகள் சந்தம் கேட்டுத்
சாதிமதப் பேயோடும் ! ஈழக் கூட்டின்
மூலைமுடுக் கெங்கெங்கும் முல்லைப் பூக்கள்
மும்மாரி மழையாகப் பூத்துக் கொட்டும் !

தாயிடத்தில் காணாத அன்பை எல்லாம்
தருமீழப் படைகாத்துத் தரணி போற்றும்
பாயிரத்தின் வலிமாற்றிப் பசுமை சேர்ததுப்
பாரெல்லாம் தமிழரறப் பறையும் சாற்றித்
தீயிடத்தும் புன்சிரிப்புப் பூக்கும் வேங்கை
செயல்வீரப் பண்புதனைச் சேர்த்த செம்மல்
ஓயாத அலையுள்ளே உதிர்ந்த மூச்சின்
உயிரணுவும் உருவெடுக்கச் செய்த தேவன் !

கொங்குதமிழ்க் கூட்டணியும் கொலைஞர் பேச்சால்
கொடுமைபல புரியவைத்த பார தத்தின்
கங்குல்ம னப்பேயின் குணத்தை ஓட்டக்
கொடுத்தவடி இன்றுவரை குரைக்கும் போதும்
தங்குதடை ஏதுமிலாத் தமிழீ ழத்தின்
தகைசான்ற எம்மீழத் தலைவா ! உன்னால்
எங்குமெழில் பூத்துவிடும் இன்னோர் ஜென்மம்
எமக்கென்றும் தேவையில்லை இதுவே போதும் !

இறைநெஞ்சப் பேரொளியே ஈழத் தாயின்
எழில்சேர்த்த தூயவனே ! எதிரிப் பேயின்
சிறைமீட்டுத் தமிழரினம் செழிப்பைக் காணச்
செந்நெறிகள் வார்த்தவனே ! செயலின் வீரா !
நிறைவுற்றுப் போகாமல் நீழும் தாகம்
நின்கரத்தால் போக்கிவிட வேண்டும் என்றே !
அறுபத்து ஓராண்டில் அகவை காணும்
அற்புதனே போற்றுகிறோம் அன்பால் இங்கே !

தாழ்நிலத்தில் உப்புறைந்து தருவேர் மாழும்
தன்மையதாய்த் தமிழ்மக்கள் ஏங்கும் போதில்
வாழ்நாளை நூறாண்டாய் வடித்துத் தந்தீர்
வாழ்த்துகிறோம் ! வணங்குகிறோம்! வல்வை மைந்தா
ஏழ்பிறப்பும் உன்புகழை உலகம் போற்றும்
எம்'கனவும் நனவாகி ஏற்றம் காணும்
நீழ்பெருமை கொண்டிலங்கும் தலைவா ! உன்னை
நெஞ்சார வாழ்த்துகிறோம் வாழ்க வாழ்க !