புரட்சி கவிதை

சம்மதிப்பீர்...

Inthiran
19, December 2017
Views 1970

முத்து முத்தான தத்துவங்கள் அவை
முன்னோர்கள் தந்துவைத்த சொத்து சுகம்
செத்தாலும் வாழ்கின்ற செல்வங்கள் அதைக்
கொத்தோடு கொண்டாடிச் செல்லுங்கள்

எத்தனை பேரேனும் வாருங்கள் என்னை
என்னவென்றாலும் சொல்லுங்கள் உங்கள்
அத்தனை பேருக்கும் நான் சொல்வதென்ன
என் சித்தத்தில் வந்த சில அர்த்தங்களே

புத்தனைக் கும்பிட்டுக் கொலைசெய்கின்றார் ஒரு
பக்தனாய் இருந்தும் பணம் காய்க்கின்றார்
செத்தவன் பெயரிலும் சொத்து சேர்த்துப் பெரும்
சுத்து மாத்தில் அரச கடை ஓட்டுறார்

கத்தியில் நஞ்சுதான் கச்சிதமாய்த் தடவிச்
சத்திர சிகிச்சைகள் செய்து வைப்பார் தம்
புத்தியில் சுவாதீனம் அற்றவர் தான் அந்தச்
சத்திகள் வாழ்வதோ சகதிகள் ஆள்வதோ

முத்தியளிப்பதில் மூர்க்கரை ஏய்ப்பதில்
சத்தியவான்களே சபதமெங்கே  நீவிர்
பத்தியம் காத்ததும் பார்த்து இருந்ததும்
மெத்தனவே போதுமினிச் சம்மதிப்பீர்...