காதல் கவிதை

புண்ணியம் செய்வோம்

Inthiran
16, December 2017
Views 691

என்னுக்குள் இருப்பதெல்லாம்
எடுத்தெறிந்து போட்டேன் பெண்ணே
உன் கண்ணுக்குள் நிலவு வந்து
கதைகளைச் சொல்லக் கேட்டேன்
விண்ணிலே வாழும் மீன்கள்
விடுகதை போட்டுப் பார்த்தும் உன்
கண்ணிலே உள்ள காந்தம்
கதிர் வீசிக் கலைத்துப் போடும்

மண்ணிலே பிறந்த நானும்
இந்த மானுடன் பின் தொடர்வேன்
பண்ணிலே பாடல் பாடிப்
பைத்தியம் ஆகும் முன்னே அடி
வெண்ணிலாப் பெண்ணே வாடி
விளைவுகள் நன்கே நாடிப்
புண்ணியம் செய்வோம் கூடி
இந்தப் புவியிலே நீயும் நானும்