புரட்சி கவிதை

பூவல்ல நீ...!!

12, September 2017
Views 679

பூச்சூடும் பூவுனக்கு
பூமாலை சூட்டிடவென
வாங்கி வந்த பூக்களெல்லாம்
வாசம் தொலைத்து வாடினது கண்டு
நசுங்கிய பூவென நான்
உளமுடைந்தேன் இன்று
உணர்ந்தேன்…….உன்
வாசம் தீண்டியதில் கவலையுற்று
அவை வாடினதே நிஜம்

வளரும் செடிகளுக்கு
வானம் தூவும் விந்து தேவை
மலரும் பூவினிற்கு - உன்
மேனி தடவிய காற்று தேவை

கன்னியே என்
காதலே
அல்லியே - வாடா
மல்லியே

வாடா மல்லியுன்னை - எனை
வலி செய்யும் கள்ளியுன்னை - எந்தன்
வீடாள நான் செய்ய
வாராதோ வரமெனக்கு

கிட்டும் வரமாயின்
சொர்க்கம் நான் காண்பேன் - நீ
வாராது போயின் - உளம்
தாளாதுடைவேன்

பெண்ணே……….
பூவென உன்னைச் சொல்ல மாட்டேன் - உந்தன்
கூந்தலில் பூவேதும் சூட மாட்டேன் - உன்
தலையினில் தரித்து நிற்க
எந்தப் பூவுக்கும் தகுதியில்லையடி..

வந்து போகும் விருந்தினர்க்கெல்லாம் (தேனிக்களுக்கு)
தன் கற்பை அள்ளிப் பங்கு போடும்
மானங்கெட்ட பூக்களள்ளி - உன்
மார்முட்டும் மாலையிட
துளியேனும் விருப்பம் கொள்ளேன்

தகுதியான பூ கண்டால்
அதைக் கொண்டுந்தன்
மஞ்சம் நிறைப்பேன் - அதன்
செடியாலே என் தோட்டம் நிறைப்பேன்
நிறையும் பூவோடு - என்
உளம் நிறையும் காதல் வளர்ப்பேன்.