ஏனையவை

முரண்பாடுகள்

Inthiran
12, September 2017
Views 554

அடித்துக் கொலை செய்தவன்
தியாகியாகும்போது 
அடிபட்டு இறந்தவன்
துரோகியாகிறான்

இறைச்சிக் கடைக்கும்
பரிசுத்தொகை வழங்கியது
மிருகவத்தைச் சட்டத்தின்
மேற்பிரிவு

செருப்பால் அடிப்பேன் நீ
உருப்படவே மாட்டாய்
இது ஆசானின் வாக்கு
குருவே தெய்வம்

பசு மாட்டைக் கட்டிப் போட்டுப்
பால் கறந்து குடித்து விட்டு
பசு பால் தரும்
கருணைமிகு வாசகம் 

எழுதி வைத்துக் கடன்கொடுத்து
ஊதியம் வசூலிக்கிறான்
சமூக சேவைதனைச்
சரளமாய்ச் செய்பவன் 

ஆண்பிள்ளைக்குப்
பசுப்பால் பெண்
பிள்ளைக்கும் பால்
அது கள்ளிப்பால்