காதல் கவிதை

உன்னையன்றி யாருமில்லை

சாந்தனேஷ்
11, September 2017
Views 675

கண்ணிமைக்கும் பொழுதுகளில்
உன் இமைகளிடை மின்னல்
சன்னங்கள் படாமல் சரிந்து
போகிறது என்னுடல்

மல்லிகை பூக்கள் உன்
கொவ்வை இதழ்களிடை
உன் புன்னகை

வானத்து நிலவுக்கு கை, கால்
முளைத்ததாய் உன் தங்க முகம
கார்மேகமாய் உன் கூந்தல்
தென்றல் அதன் நறுமணம்
திருடி பூக்களிடம்
எடுத்துச் செல்லுகிறது

பூமித்தாயவள் உன் பாதச்
சுவடுகளுக்காய் ஏங்கியபடி
தன்மேல் நின் முத்த தொடுகைக்காய்
புளுவாய் நெளியும்
உன் இடை தளுவ தென்றலது
தவித்தபடி

பூ இடை நீ கொண்ட சேலையின்
யொலிப்பில் வானவில்
வாயடைத்து ரசிக்கிறது
முற்றத்து முன்றலில் உன்
கூந்தலிடை தரித்திட
பூக்கள் தவக்கோலம்
யாருக்கு கிடைக்கும் அந்த பாக்கியம்?

உன் தேகம் நனைத்துட
மழைச்சாரல் விழ. உனை
தழுவியவை மோட்சம் கண்டும்
உனை தீண்ட முடியாமை
நிலம் வீழ்ந்தவை நீரோடு
நீராய் கண்ணீராய் சென்றபடி
தெருவோடு பேரூந்தின்
இருக்கைகள் உன்
அமர்விற்காய் ஏங்கியபடி.

எல்லோரும் வணங்கும்
சிலையது கூட கண்விழிக்க
தவித்தபடி உன் எழிலை ரசிக்க.
உன் நினைவுகள் சேமித்தபடி
பச்சையமாய் நான்

உனக்கு நான் ஈடில்லை
ஆனால்......
எனக்கோ உன்னையன்றி
யாருமில்லை