ஏனையவை

ஒரு பறவையின் தற்கொலை!

11, September 2017
Views 509

நெருப்பில் இருந்து கருகி
இறந்து தன் சாம்பலில் இருந்து
மீண்டும் மீண்டும்
எழும் பீனிக்ஸ் பறவை,
இறப்பில் இருந்து பிறப்பை நோக்கிச்
செல்கிறது!

மரணம் என்பது அதற்கொரு முடிவல்ல
ஆரம்பத்தின் அஷ்த்திவாரம்!
மலையைக் கூட தகர்க்கும் பராக்கிரமம்
கொண்டும் ஆர்ப்பாட்டம் இல்லாதவை!

கூற்றுவன் கூப்பிட்டவுடன் தம்மை
தாமே கொலை செய்து மீண்டும்
கருவாகின்றன!
பறவை இனம் தான் இறப்பதை
அறிந்து தன் கூட்டத்தை
விட்டு வெகுதூரம் சென்றுவிடும்!

மானிடன் மட்டும்தான்
தானும் இறந்து பிறறையும்
சாவடிப்பான்!