ஏனையவை

ஒரு மரணம் மறு ஜனனம்

09, September 2017
Views 525

மழைத்துளி மரணமே
பயிரின் ஜனனம்
பயிரின் மரணமே
வாழ்க்கை ஜனனம்....

பூவின் மரணமே
காயின் ஜனனம்
காயின் மரணமே
கனியின் ஜனனம்....

சூரியனின் மரணமே
சந்திரனின் ஜனனம்
சந்திரனின் மரணமே
பகலின் ஜனனம்....!

பழமையின் மரணமே
நவீனத்தின் ஜனனம்
நவீனத்தின் மரணமே
உலக அழிவின் ஜனனம்....!

அறியாமையின் மரணமே
அகந்தையின் ஜனனம்
அகந்தையின் மரணமே
ஞானத்தின் ஜனனம் .....!!!