காதல் கவிதை

தேவதையோ சிலையோ..!

Inthiran
09, September 2017
Views 1034

எண்ணங்கள் யாவையும்
நட்ஷத்திரங்கள் அந்த
வண்ணங்கள் மேவிடும்
வானவில் கோலங்கள்

கண்களோ கார்த்திகை
தீபங்கள் ஆகும் இரு
கன்னங்கள் காஷ்மீரின்
ரோஜா மலர்கள்

பெண்ணே உன் கண்களோ
பொன் மீன்களோ உந்தன்
முன்னாலே கோபுரத்துக்
கலசங்கள் ஏனோ

பத்து விரல்களும்
கொத்து மலரோ மேல்
நெற்றியின் மத்தியில்
முத்து மணி தானோ

சித்திரை வானத்தில்
வரும் நிலவைப் போலே
தேனிலே நனைத்தாடும்
தேவதையோ சிலையோ……