Poem of the day

மனிதம் வெல்லும்

நீதி செத்துப் போனதென்று
நிலமகளும் வருந்துகின்றாள்
நாதியற்ற நாங்கள் மட்டும்
நடுத்தெருவில் வாழுகின்றோம்

புரட்சி கவிதை Inthiran 14, October 2017 More

காதல் கவிதை

நாளையும் பாடுவேன்.....!

Inthiran
19, June 2017
Views 605

பாவைக்கும் பாவைக்கப்
படைத்தவன் விரும்பும்
பூவைக்கும் பூவைக்குப்
பொன்னான திருநாள்

புன்னகை மாறாமல்
பூத்ததோர் கொடியை
வண்ணங்கள் மேவிய
வானவில் அழகை
வெண்ணிலாபோல் வரும்
விளையாட்டுச் சிரிப்பை
இன்னமும் ரசிக்கின்றேன்
இயற்கையின் குறும்பை

மாமழை தந்திடும்
கார்மேக வரவை
சாமரம் வீசிடும்
பூந்தென்றல் காற்றை
ஓவியம்போல் வரும்
மாலையின் சிறப்பைக்
காவியம் ஆகுதே
செந்தமிழ்க் கவிதை

காதலைக் கண்களால்
கூட்டிய மயிலைக்
கானங்கள் பாடியே
கடக்கின்ற குயிலைக்
காலையில் மயக்கிடும்
கதிரவன் வரவை
நாளையும் பாடுவேன்
நான் அந்தச் சிறப்பை