காதல் கவிதை

ஆலோலம்!!!

Inthiran
15, June 2017
Views 1039

கண்கள் பருகுது அழகுதனை
இதயம் நெருங்குது மனவாசல்
உதடுகள் பேசுது மௌன மொழி
உதயம் ஆகுது காதல் கவி

தந்திரமின்றி ஆசை வலம்
மந்திரமின்றிப் பூசைகளும்
சுந்தர வானில் அழகு நிலா
சுகந்தருமந்த வேளைவரும்

சேர்ந்தன இதயங்கள் இன்பமென்று
கோர்த்தன கைகளும் காதலினால்
வேர்த்தன மெய்யொடு மெய் சேர்ந்து
ஆர்த்தன பறவைகள் ஆலோலம்