ஏனையவை

மனமே

26, December 2015
Views 5798

அவ நம்பிக்கை கூடும்போது
மனதில் தைரியமும் குறையுது
வாழ்வில் பள்ளமும்  உருவாகிறது 
நம்பிக்கை விதை போடும் போது
தையிரியமும் கூடும்
வாழ்வும் சமச்சீர்  ஆகும் 
 
மனமே உன் சக்தி
உன்னுடம் இருக்கிறது 
அதை தொலைத்து விட்டு
இன்னொரு இடத்தில் நோக்காதே
 
மனதில் வலிகளும் சோகங்களும்  நிறைந்தால்
வாழ்வும் தடுமாறும் மனமே
நீ தெளிவான மனம் கொண்டால்
உன் வாழ்வும் வசந்தம்  ஆகும்
கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்றால்
உன் மனதில் நம்பிக்கை உரம் போடு
வாழ்வும் நல்ல வண்ணம் ஆகும்  
 
காலங்களும் நாளை மாரும்
 நினைவுகளும்  நாளை கரையும்
உன் மனம் திடம் மாறினால்
உன் வாழ்வு திசைமாறும்