காதல் கவிதை

பிரியா இதயமே...!

சிந்து.எஸ்
13, December 2015
Views 5737

பிரியா இதயமே
பிரிய வேண்டும்
என்று நீ நினைத்தால்
பிரிந்து போய் விடு
பிறர் வார்த்தை ஜாலம் -உனை
பிய்த்தெறிய விடமாட்டேன்
பிரிவு எனும் வார்த்தை கூறி -எனை
புரிய மறுத்தாலும் என்னுள்
புரளும் உன் எண்ணத்தை
புதைத்து விட முடியது என்னால்
பத பதைக்க எனை வதைத்தாலும்
பாவியான என் மனமோ
பணத்தில் படியுதில்லையடி
பாழாப்போன உன்
பாசத்துக்கு மட்டுமே
பணிந்து நிற்கிறது...!