ஏனையவை

வரவேண்டாம் 2013

சபேஷ்
02, January 2013
Views 1239

வருடங்கள் பிறக்கும் போது
வாழ்வினை எதிர்பார்த்து
அங்கலாய்த்திருந்தவர்களுக்கு
வாழ்வாதாரங்களை கூட கொடுக்காத
வருடங்களாய் போயின.

வருடங்கள் பிறக்கும் போது
துன்பங்கள் அகன்றதொரு
வருடமாகயிருக்காதா!  என
அவாவியவர்களுக்கு  அய்யோவெனெ
கதறுமளவுக்கமைந்த புதுவருடங்கள்.

வருடங்கள் பிறக்கும் போது
மழை பொழிந்து குளங்கள் நிரவி
வயல்கள் பச்சை நிலங்களாகுமாவெனெ
எதிர்பார்தது காத்திருந்தவர்களுக்கு
குருதி மழைபொழிந்து  சிவப்பு நிலங்களாகின
ஒவ்வொருவருடங்களும்.

வருடங்கள் பிறக்கும் போது
ஓலைகுடிசைகள் கட்டிடமாகாதாவெனெ
ஆசைப்பட்டவர்களுக்கு  புதைகுழிகளும்
கல்லறைகளும் வீடகளாகின.

வருடங்கள் பிறக்கும் போது
பிறந்து தவண்டு விளையாடிய
மண்ணுக்கு போகமுடியாதாவெனெ
ஆசையாயிருந்தவர்களுக்கு அயலவனின்
அகதிகளாய் வாழ வைத்த ஆண்டுகளாயிருந்தன.

பிறந்த வருடங்கள் பார்த்தவர்களுக்கு
பிறக்கபோகும் 2013  என்ன புதுமையாகமையுமா
ஒருபோதுமில்லை
பிறக்கும் 2013 பிறக்கவேண்டுமா வேண்டாம் வேண்டாம்
2013.