காதல் கவிதை

காத்திரு உன்னை மறக்கிறேன்

12, March 2011
Views 9443

உன்னை மறக்காமல் வாழ்வதற்க்கு
நான் ஒன்றும் தேவதாசோ சாஜஹனோ அல்ல
உன்னை என்னால் மறக்க முடியும்
நான் உன்னை மறக்க காத்திருக்கும்
அந்த ஒரு நாளில் காதல் என்ற மூன்று
எழுத்தின் அர்த்தம் இந்த உலகில் வாழும்
எந்த ஜீவனுக்கும் புரியாது.....

தேவதாஸ் காதல் என்ன
தாஜ்மகால் காதல் கூட
காற்றோடு தூசாக பறந்துவிடும்
வீசிகொண்டிருக்கும் அன்பு எனும் காற்று
அந்த நாளில் வீசாது
பாவம் அன்பு கொண்ட
உள்ளங்கள் அனைத்தும் மரித்துவிடும் ......

அந்த நாள் வரை நீ காத்திரு
உன்னை நான் மறக்க முயற்சிக்கிறேன்
அதுவரை உன் வாழ்க்கை
நீ விரும்பிய அந்த கணவனோடு
ஆனால் உன் நினைவுகள் மாத்திரம்
உன் இதயம் விரும்பிய இந்த காதலனோடு.