காதல் கவிதை

காதல்!!

சுஜாதா
07, November 2015
Views 5753

உன் கண்ணில் என் விம்பம்
என் பேச்சில் உன் நாமம்
உன் மூச்சில் என் கீதம்
என் வசத்தில் உன் தேகம்
உன்னிடம் தான் நான் தஞ்சம்
என்னிடம் தான் நீ சொந்தம்
நம்மில் தான் எம் பந்தம்
எம்மில் தான் என்ன காந்தம்
உன்னைக் காதலித்தேன்
என்னை நான் மறந்தேன்
உன் பெயரை நான் சொன்னேன்
என் பெயரை நான் மறந்தேன்
உன் நினைவில் நான் மலர்ந்தேன்
என் நினைவே நீ ஆனாய்