காதல் கவிதை

காதல் வந்தால்...

கமல்ராஜ்
31, January 2011
Views 7921

காதல் ஒன்றும் பரீட்சையல்ல
காகிதத்தில் எழுதிச் சொல்ல
கண்களின் உரையாடல்
மொழியொன்றும் தேவையில்ல

இமைகளின் அசைவில்
புகுந்திடும் காதல்
இடைவெளியின்றி
தொடர்ந்திடும் மோதல்

ஆயிரம் கோடி ஆசைகள்
ஆன்மாவில் ஊறும்
அன்பின் பெருக்கம்
அருவியாய்ப் பாயும்

இதயத்தின் துள்ளல்
இணைவினைச் சொல்லும்
விநாடிகள் வந்து
உணர்வுகள் ஊறும்

விளக்கமின்றி
உதடுகள் விரியும்
விடிவினைக் கண்கள்
விரைவாய் அழைக்கும்

காதலன் முகம் காண
ஆசைகள் பறக்கும்
விழித்துக் கொண்டே
கனவுகள் மிதற்கும்

காதல் உள்ளம்
அத்தனையையும் வெல்லும்
ஆழ்கடல் தொலைவில்
ஆன்மாக்கள் உலாவும்......