காதல் கவிதை

பயனுள்ள பயணக்குறிப்புகள்

17, July 2017
Views 159

ஒரு நெடும் பயணத்தின் இடையில் நீ குறுக்கிட்டபோது
ஒரு புதிய பயணம் துவங்கிவிட்டதாகவும் 
அதன் இலக்கே நீ தான் எனவும் தோன்றியது.
நீ இலக்கில்லை எனப் புரிந்த கணத்தில்
பயணமே நீதான் என மனம் மயங்கியது.
அதுவுமல்ல எனத் தெளிந்தபொழுது
பயணத்தின் வழித்துணை நீயென மகிழ்ந்தது
பின், ஒரு பயணத்திலிருந்த என்னை
வேறொரு பயணத்தில் இணைத்த
பாலம் நீயென எண்ணியது.
உண்மையில் என் பயணத்தின்
சிறு இடைத்தங்கல் மற்றும் இளைப்பாறல் மட்டுமே
நீயென்று மனம் தெளிந்தபோது,
நீ வேகத்தடை மட்டுமோ என்று
வேறொரு எண்ணமும் வராமலில்லை...