நடப்பு கவிதை

எது சுமை

17, July 2017
Views 97

எது சுமை உன் வாழ்வில்
மானுட கனி தரும் மரமும்
சங்கடங்களை நினைத்து
தன் விழுதுகளை சுமக்க மறுப்பதில்லை
நீ மட்டும் உன் கண் விழிகொண்டு
பார்க்கும் சங்கடங்களை மனதில்
கொள்வது உனக்கு சுமையை?
வாழ்வு என்றால் போராடடம் தானே
இனிமை உணர்வை விரும்பும்
நீ மட்டும் துன்ப உணர்வு வரும் போது
அதை மட்டும் சுமை என நினைக்கலாமா?

சங்கடங்களை நினைத்து கலங்காது
உன் கனவை நோக்கி முயன்று
பார்த்தல் உனக்கு எது சுமை?
வாழ்க்கை பாதையில் சுமை தரும்
வெறுப்புகளை தயக்கம் இன்றி
சந்திப்பவனுக்கு வாழ்வில் எது சுமை?

வெறுப்பை அறியாதவன் இன்பத்தின்
இனிமையாதான் உணர்வனோ?
மண்ணின் விதைகள் போல துன்பத்தை
சகித்து வாழ்வதனை காதல்
செய்பவனுக்கு எது சுமை
சுமை தாங்கும் வேர்களுக்கு
நீர் சென்று புது உணர்வை கொடுப்பதால்
செழித்து நிற்கும் மரம் போல
சுமை தாங்கும் இதயங்களில்
காதல் உணர்வு ஓடுவதால் சுமை கூட
இனிமையாக இருக்கிறது....