நடப்பு கவிதை

காமராசர்

17, July 2017
Views 78

காமராசர்
கல்விச் சூரியன்.
நீங்கள் உருக
ஒளிரும் மெழுகுவர்த்தி
நாங்கள்.
அமாவைசைப் பாலைவனத்தில்
வெளிச்ச விதைகளை
விதைத்தாய்.
வளர்பிறையாய்
வளர்ந்தது
எங்கள் வாழ்வு.
நன்றி
காமராசரே
கல்வி தாசரே
காவிய நேசரே!