நடப்பு கவிதை

நா. முத்துக்குமார்

17, July 2017
Views 213

நா. முத்துக்குமார்
நடைமுறை சார்ந்த உவமைகளை
திரைத்துறையில்
நடனமாடச் செய்த
நல்ல மனசுக்காரர்.
திரைப்பாடல்களை
இலக்கியமாய்ச் செதுக்கிய
இனிய சிற்பி.
ஓடியோடி எழுதி
ஓடாய்ப்போன
ஓடம்.
ஆனந்த யாழை
தேனின்ப வரிகளாய் மீட்டியவர்.
பாடல்கள் எழுதிக் குவித்தும்
பணத்தை அல்ல
பாசத்தை ஈட்டியவர்.
பாரதி ஷெல்லி
பைரன் வரிசையில்
குறைந்த வயதில்
நிறைந்த சாதனை செய்து
மறைந்த மனிதர்.
அவர் புகழ் நிலைக்க வாழ்த்துவோம்.