ஏனையவை

அனுபவமோ

Inthiran
15, July 2017
Views 127

குனிந்து பார்த்தேன்
நிமிர்ந்து பார்த்தேன்
கூட வந்ததே
தெரியவில்லை

பணிந்து பார்த்தேன்
துணிந்து பார்த்தேன்
பாவம் என்பதும்
புரியவில்லை

எழுந்து பார்த்தேன்
விழுந்து பார்த்தேன்
எல்லை இல்லாத
உலகம் இது

மலர்ந்து பார்த்தேன்
மயங்கிப் பார்த்தேன்
மாயை என்பதும்
மறைகிறது

விழித்துப் பார்த்தேன்
உறங்கிப் பார்த்தேன்
கனவு இராச்சியம்
கலைகிறது

விலகிப் போனேன்
பழகிப் போனேன்
அன்பு என்பது
அதிசயமோ

அழகு என்பதன்
அர்த்தம் என்னவோ
ஆக மொத்தம் ஓர்
அனுபவமோ