புரட்சி கவிதை

உறுதி

18, May 2017
Views 132

அவலங்கள் சுமந்து
அவையங்கள் இழந்து
அலறி நாங்கள் ஓடினோம்
அண்ணாந்தும் பார்த்தோமே
அயல் நாடே..! நீயும் இணைந்தா
எம்மை அடித்தாய்.

பூவோடு பிஞ்சுமாய்
குஞ்சோடு குருவியுயாய்
மாடோடு சேர்ந்து கண்டுமாய்
நாங்களும் தானே சிதைந்தோம்
இல்லை இல்லை
எங்களையெல்லோ சிதைத்தான்.

உலகமே...!
எட்டாண்டு கழிந்தும்
எட்டவில்லையா உங்கள் காதில்
எங்கள் ஓலங்கள்.
சாவு விழமுன்னே - நீங்கள்
வேவு பார்த்து போறீறே வேறு தேசம் .
இங்கு சாவு விழுந்தும்
வேவு அல்ல
காவு கொள்ளக்கூட எவரும் வரவில்லையே.

நெஞ்சு நிமிர்த்தி - அஞ்சாது
நேர்மையாய் போராட
எம் புலி வீரனோடு 
எவனுக்கும் முடியாது
அதனால்தானோ....!
புலி என்ற சொல் இன்றும்
கதி கலங்க வைக்கிறதோ.?

உலகே இனியும் வேண்டாம் - எம்
உரிமை பயணம் தொடரும்
இது உறுதி