ஏனையவை

மாயை

Inthiran
17, May 2017
Views 266

பத்துவிரல் மோதிரம்
பகலிரவு தோரணம்
செத்துவிடும் மேனிக்குச்
செய்வதென்ன காரணம்

சிந்தையிலும் சீதனம்
சிரிப்புக்கும் வேண்டும் பணம்
சந்தையிலே வேதனம்
சாதிக்கும் சந்தானம்

வெந்ததெல்லாம் உள்ளிழுக்கும்
வேலையில்லா வயிற்றிக்குப்
பந்தியிலே பார்ப்பதற்கு
பட்டு வேட்டி அமர்க்களம்

இந்தநிலை தொடருகின்ற
அவலங்கள் பார்த்து அந்த
சந்திரனும் தேய்கின்றான்
சங்கடமேன் சாந்தி சாந்தி