காதல் கவிதை

காதல்!!

15, May 2017
Views 913

 காதல்
அழகிய அனுபவம் -அது
கல்லைக்கட்டி
கடலுக்குள் குதிக்கும்
அதிசயம்.

காதல்
இரு இதயங்களின்
சங்கமம் - அது
சிறகுகள் இன்றி
விண்ணில் பறக்கும்
புது சுகம்.

காதல்
பார்வைகளினால்
பற்றி எரியும் தீச்சுவாலை -அது
கண்ணீர் ஊற்றியும்
அணையாத எரிமலை.

காதல்
பூவின் இதழ்களைப்போல
மென்மையானது- அதனடியில்
முற்கள் ஒழிந்திருப்பது
யாரும் அறிந்திராதது.

காதல்
பெண்களின் அழகைப்போல
போலியானது - அதில்
அவர்கள் காட்டும் அன்பு
பாம்பின் நஞ்சைவிட
கொடுமையானது.

காதல்
மரணத்தின்
நுழைவு வாயில் -அதில்
சொர்க்கம் போவதும்
நரகம் போவதும்
அவரவர் கைகளில்.