ஏனையவை

காலமெல்லாம் கனவாச்சு

Inthiran
20, April 2017
Views 793

கார்மேகம் முகம் மாறியது
போர்மேகம் ஆகியது
யார் செய்த வஞ்சனையோ
பேர் போன தமிழா

ஏர் போன இடங்களெல்லாம்
நேர் போக யாருமில்லை
கால் போன போக்கினிலே
ஊர் போக முடியவில்லை

நீர் நாலு பக்கமுள்ள
நிலம்தானே என்றாலும்
நிம்மதியாய் நாமிருந்த
காலமெல்லாம் கனவாச்சு