குட்டிக் கவிதை

உயிரே! தமிழே!!

20, April 2017
Views 1171

அழித்தாலும்,புதைத்தாலும்
அடியோடு, வெறுத்தாலும்
கருவோடு, கலைத்தாலும்
கலை எல்லாம், பறித்தாலும்
 
இருக்குமிடம், எரித்தாலும்
இடம் மாறி, அலைந்தாலும்
உருக்குலைந்து போனாலும்
உயிர் தமிழே நீ வாழ்வாய்.