ஏனையவை

சந்திரன்

சுஜாதா
18, April 2017
Views 478

முகத்திரை விலக்கி நின்று
முழுமதி பார்த்திருக்க
கதிரவன் மறைந்து சென்று
கண்களை மூடி நிற்க
மெதுவாக நிலவு தந்து
முழுதாகக் குளிர்மை கொண்டு
மாலையில் மயக்கம் தந்து
மனதோடு விளையாடி
தாய் போல் தேய்ந்து
மழலை போல் தவழ்ந்து
உடுக்களினின் நடுவினில்
தோன்றினான் சந்திரன்