ஏனையவை

என்ன?

Inthiran
18, April 2017
Views 136

வந்திருந்த இடங்களென்ன
வாகை சூடி நடந்ததென்ன
சிந்தையிலே சிறந்ததென்ன
சீர் பெருகக் கிடந்ததென்ன
பந்தியிலே விரைந்ததென்ன
பகலிரவாய்ப் இரைந்ததென்ன
அந்த இடம் மறைத்ததென்ன
அப்படியே இறைத்ததென்ன
இன்றுவரை இனித்ததென்ன
ஈர நெஞ்சம் இழந்ததென்ன
வெந்ததெல்லாம் சுவைத்ததென்ன
வெறும் வயிற்றில் வலித்ததென்ன
சந்ததமும் சலித்ததென்ன
சாதித்த சவால்கள் என்ன
மந்தையென  மறந்ததென்ன
மறுபடியும் பிறந்ததென்ன
பிந்தியதால் குறைந்ததென்ன
முந்தியது முறைத்ததென்ன
தாயிருந்தும் தவித்ததென்ன
தவறுகண்டு கொதித்ததென்ன
சாலையிலே அலைந்ததென்ன
மாலையிலே குலைந்ததென்ன
காலையிலே கலைந்ததென்ன
கௌரவத்தால் தொலைந்ததென்ன
அந்தகனும் வரும் வேளை
அத்தனையும் பறந்ததென்ன