காதல் கவிதை

அழகே

ஷிவஷக்தி
16, April 2017
Views 268

உன் குறும்பு சிரிப்பில்
கூடாரம் போட்டேன்
சினுங்கும் பார்வையால்
தடுங்கி விழுந்தேன்..

பூப்போல வார்த்தையால
சிதறிப்போனேன்
அன்பை பார்த்து இதயம்
மறந்துபோனேன்..

கூந்தல் நளினம் கண்டு
மயில் இறகின் நேசம்
கண்டேன்
கைவிரல் அழகில் கூந்தல்
தள்ள அழகின் தூரம்
பார்த்தேன்..

கால்விரல் என்னைகண்டு
பேச கேட்டேன்
மெட்டி மாட்டும் நேரம்
எதுவென தேடிப்பார்த்தேன்
தட்டிபார்த்தேன் என் நெஞ்சை
உன் குரலில் என்னை மறந்தேன்..