காதல் கவிதை

கொஞ்சம் கொஞ்சமாக கொல்வதில்....!!!

22, September 2013
Views 1080

நீ தொட்டாசுருங்கி
நான் அருகில் வரமுன்
ஓடுகிறாய்....!!!

நான் தொடர் கதை
எழுதுகிறேன் -நீ
சிறுகதை  வேண்டும்
என்கிறாய்...!!!

நீயும் மதுவும்
ஒன்றுதான்...
கொஞ்சம் கொஞ்சமாக
கொல்வதில்....!!!