காதல் கவிதை

உயிர் கரையும் நொடியில்....

17, August 2013
Views 872

உன்னால் உடைந்து போன
உள்ளத்தை ஓட்ட வைக்க
நினைக்கிறேன் ....
உனக்காய் வாழ்ந்த
நினைவுகளுக்கு உயிர்
கொடுப்பதற்காய்....

உன்னை பிரிந்து
அழுத வேளைகள்
இன்றும் தொடர்கிறது,.....
உனைக் காணாமல்...

கண்ணீரில் கவியெழுதி
வாழ்கிறேன்...
உன்னிழப்பின்னை
இதுவாவது ஈடு செய்யும்
என்று....

 கவிதைகளில் உன்
நினைவுகள் எழுதி
கண்களை மூடி
கனவுகள் காண்கையில்
உன்னோடு மனத்தால்
பேசி உறவாடிய
நாட்களுள் நுழைகிறேன்...

உன்னோடு வாழ
முடியாத வேதனையை
உன்னை எண்ணி
உருகும் வேளைகள்
தீர்ப்பதாய் உணர்கிறேன்...

என் உயிர் கரையும்
அந்த நொடி
உனைக் காண ஏங்கும்
நிமிடங்களில் நீ இருப்பாயா
அக்கணத்தில்....
இப்படித்தான் புலம்புகிறேன்...
உன்னாலே...

எப்படி முடியும்
எமை விட்டு
உன் உயிர் பிரிய...
உனக்காக நாம்
இங்கு சிந்தும் கண்ணீரில்
எத்தனை பிரார்த்தனைகள்
நீ நலமோடு வாழவென...

நீ என்று வருவாய்
உனைத் தேடும்
உறவுகளின்
துயர் துடைக்க....?