புரட்சி கவிதை

பன்னிரண்டு புலிகள் உறக்கத்திலே..........

28, April 2013
Views 1359

வல்வெட்டித் துறையினிலே
நாம் வளர்த்த புலி வீரர்களே
தீரூ வெளியினிலே
தீமூட்ட நேர்ந்ததோ உங்களிற்கு

பன்னிரண்டு பேரும் செய்த பாவம் என்ன
ஒன்றாகச் சேர்ந்து துயில்கொண்ட மாயம் என்ன
உண்ட உணவு விசமானதோ உங்களிற்கோ
உண்மை எம் அறிந்த நெஞ்சு சோகத்தின் வசம்னதோ

குமரப்பா, புலேந்தி, அப்துல்லா, நகு, நாள்
பழனி, மிரேஸ், ரெகுநால், தவக்குமார், அன்பழகன்
கரன், ஆனந்தகுமார் நீங்கள் அனைவரும்
எங்கே சென்று விட்டீர்கள்

நினைவுத் தூண் உங்களிற்கு அமைத்து
நினைப்பெல்லாம் உங்கள் வசம் மாற்றுகின்றோம்
தமிழீழத் துளிகளே உங்களை
தந்துவி்டு ஆண்டவன் பறித்த மாயம் என்ன

விழித்தெழ முடியாத உறக்கத்திலே
விழிகள் மூடி நம் வழிகளை ஈரம்க்கி விட்டீர்களே
விதியை மாற்றிவிட எம்மால்
முடியவில்லையே...............

வித்தாக வேண்டும் என்று
விதைக்க வைத்து விட்டீர்களே
விருட்சம்ய் நீங்கள் வளர
வேண்டுகின்றோம் தினம் தோறும் கடவுளை

நீங்கள் இறந்து ஆண்டுபல களிந்தாலும்
உங்கள் நினைவு புலிகளின்வரலாற்றைவிட்டு நீங்காது
நீங்கள் காவிய சரித்திரம்
நீங்கள் அனைவரும் தான் புலிகளின் முடிவில்லாக்கதை