காதல் கவிதை

நீ இருப்பதால்

19, April 2013
Views 1286

ஏதேதோ
 எழுதவேண்டும்
மனதைக்  கவரும்
நிகழ்வுகளை
 
ஆனாலும்
அடங்கி விட்டேன்
நேரத்தின்  கைக்குள்
 
இனிதாக
உணர்கிறேன்
என் வாழ்வை
 
என்றும்
நீ இருப்பதால்
என் மனதில்.....