ஏனையவை

செத்து செத்து வாழ்கிறேன்

10, April 2013
Views 1623

செத்து செத்து வாழ்கிறேன்
செத்து போன வாழ்க்கையை
தேடித்தேடி தொலைகிறேன்
தொலைந்து போன உறவுகளை
புதைந்து போன நினைவுகளை
தூசிதட்டி ........

புரட்டி பார்க்கிறேன் நானே
துடியாய் துடித்து போகிறேன்
நிஜங்கள் எல்லாம் இன்று
தொலைந்து போனது எங்கள்
தேசத்திலே

பொய்களெல்லாம் தொடர்கிறதே
புலம் பெயர்தேசதிலே
அடடா வேணாம் வேணாம்
செத்து செத்து பிழைக்கும்
இந்த வாழ்க்கை ................
செத்து போகிறேன்
நித்தமும் நானே .........!