Poem of the day

மீட்டுவதும் தமிழ் தானே!...

தென்றல் உலவுகின்ற
தேன்பூக்கள் பரவுகின்ற
இன்பச் சோலைகளில்
இருக்கும் மொழி தமிழாக!

ஏனையவை Inthiran 23, May 2016 More

புரட்சி கவிதை

ஆனந்தபுரத்து கந்தக நெருப்புகள் !

07, April 2013
Views 1567

பிரிகேடியர் தீபன் முதல் பல
போராளிகளும் 25 ஆண்டு காலம் ஓயாது
அடித்துக்கொண்டிருந்த புயல்
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில்
நிரந்தரமாக அடங்கிப் போய்
இன்றுடன் 4 ஆண்டுகள் !
யாழ் மாவட்டம் தென்மராடசியின் 
பூர்வீகக் குடியாகிய தீபன் !
வரலாற்று கடமையை
உணர்ந்து போராளியானாவர்
21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய
போராவலத்தின் போது
சிங்கள இராணுவத்தினராலும்
தமிழின துரோகிகளாகிய
கூலிகளின் படைகளின் சதிவளையில் சிக்கி
ஈழமண்ணிற்காய் உயிர்
திறந்த மாவீரர்கள் ழூவயிராம்
தீபன் தமது போராளிகளுடன்
வழி நடத்திய பல வெற்றிச் சமர்கள்
தமிழீவிடுதலைப்போராடத்திற்க்கு
மகத்தான வெற்றியை தேடித்தந்தவர்கள்
இவரின் திறமையும்,  வீரத்தினையும்
வெளிப்படுத்திய இரு சமர்கள்
யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்ல் இதில்
வடக்கே யாழ்ப்பாணம் நேக்கி
புறப்பட்ட யாழ்தேவி சமரை
இடை நடுவில் தடம்புறள
வைத்த தீரா படைதளபதி தீபன் !
புல மறியடிப்புச்சமர்களுக்கும்,
பலகளநிலைத் தாக்குதல்களுக்கும்
தீபன் போரியல் தந்திரமும்
சமயோசிக புத்தி வலுநிலையும்
ஈருடகச் களநிலைகளிலும் சமரான வலிமை கொண்ட அவர்
சிங்கள இராணுவத்துடன் ஆனா
பல முன்னேறிப்பாய்தலுக்கெதிரான
புலிப்பாய்ச்சல்களில்
இடிமுழக்கமாய் தனது பங்களிப்பினை
ஈழமண்ணிற்க்கு வழங்கிய
மாபெரும் வீரன் எங்கள் பிரிகேடியர் தீபன் !
தீபனின் திறமையான
திட்டத்தினால் பல ஆயிரம் சிங்கள
எதிரிப் படைகள் சின்ன
பின்னமாகி உடல் உறுப்புகளை
இழந்தவர்களின் பட்டியலில்
இடம்பெற்றாவர்கள் பலர் !
எமது தளபதி தீபனும் மற்றும் பல
தளபதிகள் போராகளிகள் என
பலரை குல்லநாரிகளும்
சிங்கள தேசத்திற்கு வால் ஆட்டும் நாரிக்
கூட்டங்களும் இணைந்து
சர்வதேச போரியல் விதி முறைக்கு
ஏதிராக நச்சுக்குண்டுத் தாக்குதலில் வீரகாவியமானர்கள் !
“இந்த சமர்களத்து நாயகர்கள்
இன்று எம்மிடன் இல்லை
அவர்களின் நினைவுகள் எம்மனங்களில்
நீங்காதிருக்கும் என்பது உண்மை”