காதல் கவிதை
காதல்!
![]() |
துள்ளிய இழமையில்
தள்ளாடியது உள்ளம்
உள்ளாடினாய் நீ
கண்ணாடியில்
நானும் பேரழகனாய் தோன்ற;
நாளுக்கு நாள் நாலுவாட்டி
நான் மழிப்பேன் தாடியை
நாகரீகத்துடன் உன் நாயகனாக.
நம் பார்வைகள் ஒன்றாகி
இதயத்தில் சங்கமித்து
காதலர்கள் ஆனோம்!
நித்தமும் நிமிடங்களை
ஒற்றையாய் களித்தோம்
சட்டென்று உனக்கு என்னாச்சி!
பெற்றோரை கேட்டா
புன்னகை பிறக்க சம்மதம்
தந்தாய் நீ!
உணர்வுகள் இருந்தும்
உறவுகளை இளந்தேன்
உன்னுடன் பேசும் ஒரு நிமிடத்திற்க்காய்.
இன்று மௌனமே
பதிலென்று மறு பாதையால்;
செல்கிறாய் ஏனோ..
காதல் மாயந்தான்
புரியாத புதிர் இது தானோ?!

அன்பே உன்னை




