புரட்சி கவிதை

படைப்போம் புது சரித்திரம்!

ஷாருக்
21, January 2013
Views 1166

அழகிய திருநாடு இலங்கை
இங்கே இருப்பதோ நால்
கலாசரங்களும் மும்மொழிகளுமே
அவற்றில் சிங்களம் பேசும் சிங்கள
அரசாங்கம் தமிழ் பேசும் தமிழர்கள் மேல்
கட்டவிழ்த்தது அடக்குமுறையை
திரு நாட்டின் முதல் இனம் மீதே வன்முறைகள்...
தமிழரது சுதந்திரமும் பாதிக்கப்பட்டது
சம உரிமைகளும் நசுக்கப்பட்டன.
சுதந்திரமாய் தம்மொழியையே பேசமுடியவில்லை
எங்கும் வாழ அனுமதியுமில்லை....

வெகுண்டன தமிழின இளரத்தங்கள்
தொடக்கினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை
முப்பது வருடங்களுக்கு மேலாக
இரத்தக்காட்டேரி சிங்களத்துக்கு எதிராய்...
மகா யுத்தத்தை நேருக்கு நேராய் புரிந்தனர்.
தங்கள் இன்னுயிர்களை தியாகமும் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டிலும் ஆயிரமாயிரம் தமிழ்ப்புலிகள்
மாவீரராய் செத்து மடிந்தார்கள்....

சளைக்கவில்லை மேலும் மேலும்
யுத்தம் புரிந்தார்கள்.
சிங்களம் பயந்து பின்வாங்கி உதவி கேட்டது
உலக நாடுகளிடம்- அவை
சிங்களத்தோடு சேர்ந்து கட்டவிழ்த்தன
தமிழின அழிப்பை.
பல்லாயிரம் புலிகளும் அப்பாவி தமிழ் மக்களும்
உருத்தெரியாமல் சிதைந்தனர்.
ஈற்றில் முள்ளி வாய்க்காலில்
நசிந்தது விடுதலைப்போர்.
கோழைச் சிங்களம் தனித்து நின்று
போரிட பயந்து    உலக நாடுகளின்
உதவியோடு வெற்றி பெற்றது.
இன்று கொக்கரிக்கின்றது எல்லாம்
முடிந்துவிட்டதென்று இன்னும் தமிழினத்தை
அடக்கிக்கொண்டிருக்கின்றது.

முடியாது தமிழரின் சுதந்திர வேட்கையை
ஒடுக்க தமிழீழம் உருவாகவேண்டும்.
மோட்டு சிங்களம் தமிழரின் முன்னே
மண்டியிட வேண்டும்.
உலகத் தமிழர்களே விழித்தெழுங்கள்!
இன்னுமொரு சகாப்தத்தை உருவாக்குவோம்
உருக்குலைந்தவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையட்டும்.
படைப்போம் புது சரித்திரம்!!