நடப்பு கவிதை

நம்மவர்கள் ஏன் இன்னும் ஆடிக்கொண் இருக்கிறார்கள்,,,!

சிந்து.எஸ்
03, January 2013
Views 1812

நடராஜரும் தில்லையிலே
நடனமாடி முடித்து விட்டார்
நம்மவர்கள் ஏன் இன்னும்
ஆடிக்கொண்டே  இருக்கிறார்கள்

நன்மைகள்(நல்லது) செய்கிறோம் என்று
நாசவேலைகள் செய்கிறார்கள்
நகர்ந்துகொண்டிருந்த கப்பலும்
நன்றி கெட்டவன் சூழ்ச்சியில்
நடுக்கடலிலே தவறிவிட்டது
நறுமலருக்கும் நரகளுக்குமா ஒப்பந்தம்

நாவிருந்தால் சொல்லிவிடலாமா எல்லோரும்
நாங்கள்தான் வெறுக்கிறோமே
நடுநிலையை ஏன் செயல் பட மறுக்கிறார்கள்
பந்தி போட்டால் பரிதவிப்பவர்களை மறந்து விடலாமா ?

சந்திக்கு சந்தி எச்சி இலைகளாய்_எம்
மக்கள் படும் அவலம் பார்க்க முடியவில்லையே
பலதையும் சொல்கிறான்
ஒரு சிலதை கூட செய்ததில்லையே ஏன் ?


கசங்கிய காகிதமாய் எண்ணினானா எமை
கசங்கும் முன் காகிதம் கூட
உதவி விட்டுத்தான் குப்பை தொட்டிக்கு செல்கிறது
என்பதை ஏன் மறக்கிறார்கள்-அன்று
கூவிக் கூவி எமை அழைத்து கூட்டம் போட்டவன்
குதறியே தள்ளுகிறான் கடமை முடிந்தவனாய் இன்று  ,,,!