நடப்பு கவிதை
செய்ய முனைவேன் சில சாதனைகளை!!!!!
![]() |
ஒவ்வொரு வருடம் வருடம்
வந்து போய்விட்டது-என்
வயதும் ஏறிக்கொண்டே போகிறது
இருந்தம் மனதில் சந்தோசமில்லை.
ஏன்தான் பிறந்தேன் என்று தோணுகிறது
என் வாழ்க்கையில் அதிகம் சாதிக்கவில்லை
சாதிப்பதற்கான சந்தர்ப்பங்களும் வரவில்லை
அதற்கான முயற்சியும் பண்ணவில்லை.
காலங்களை போக்கிவிட்டேன்.
வெறும் வெட்டிப் பேச்சுக்களே மிச்சம்
நினைக்கவே என்மீது எனக்கே கோபம்
அழகிய இளங்கால வாழ்க்கை போய்விட்டது.
சரி போனது போகட்டும்.வந்த புத்தாண்டிலாவது
சாதிப்போம் என்றால் அந்தோ ஏமாற்றம்!
மாயன் நாட்காட்டி காட்டிவிட்டது
இவ்வுலகின் இறுதி நாளை.
இனி என்னதான் செய்வது? ஏன் மலர்ந்தது இந்த 2012?.
இறுதி நாளை நினைக்கையில்-என்
மனம் பதை பதைக்கின்றது
கட்டுக்கடங்காமல் உடல் பயத்தால் நடுங்கிறது.
விட்டு விட்டேன் அழகிய காலங்களை
இதை இனியும் யோசித்து பிரியோசனமில்லை
வருவது வரட்டும் அதற்கு முன்னே-நான்
செய்ய முனைவேன் சில சாதனைகளை!!!!!







