நடப்பு கவிதை

நிரந்தரமாய் இடங்கொடு.......!!!

ஹாசிம்
28, June 2012
Views 690

சுதந்திரம் கண்ட நாட்டை
சுடுகாடாய் மாற்றியதில்
எஞ்சியது ஆறடி நிலம்
அதிலுமா கூறுவேண்டுமுனக்கு

எங்கள் நாடென்று
எண்ணி உள்ளோரையும்
ஏய்த்துப் பிழைக்க நினைத்த
ஏழனப்பாவியாய் நீங்கள்

பிறந்த மண்ணைக் குறிவைத்து
பிறந்த போதே கழுத்தறுத்து
நிம்மதியற்ற வாழ்வளித்து
நிறுவுவது தானென்ன....??

அப்பாவி என்று கண்டால்
ஆதரவு தரமறுத்து
அநியாயத்தால் அடிமேலடிக்கின்ற
அரக்கர்களாய் நீங்கள்

தடுக்கி வீழந்தவனை
தூக்கிவிட நாதியற்று
தலையில் மிதிக்கின்ற
கொடுங்கோல் அரசர்களாய் நீங்கள்

நிரந்தரமற்ற வாழ்வில்
நிலைப்பவை ஏதுமில்லை
நிம்மதியாய் வாழ்ந்துமடிய
நிரந்தரமாய் இடங்கொடுத்திடுங்கள்.