புரட்சி கவிதை
உணர்வுள்ள தமிழா உணர்ந்து கொள்!
![]() |
உணர்ச்சிகள் பொங்கட்டும்
மக்கள் புரட்சிகள் வெடிக்கட்டும்
தமிழனுக்கு விடுதலை கிடைக்கட்டும்.
வீரத்தமிழா அலையென திரண்டு
அன்னியவன் அடிமை விலங்குடைத்து
விடுதலை பெற புறப்படு தமிழா புறப்படு.
தம் உயிர் நீத்த மாவீரர்கள்
அப்பாவி தமிழ் மக்கள்
கனவுகளை நனவாக்க விரைந்து வா
விடியலைக்கான விரைந்து வா.
முட்கம்பிக்குள் நம் தமிழீழம்
முகாமிட்டிருக்கும் சிங்கள இராணுவம்.
எம்மண்ணில் சிங்கள இராணுவத்தின் ஆட்சி
அதை விடுத்து பெறுவோம் மீட்சி
அப்பாவி எம் உடன்பிறப்புக்களை
கொன்றொழித்து புன்னகையை
உலகெங்கும் வீசியது சிங்களம்.
அன்று அப்பாவி தமிழ் மக்களின்
அவலக்குரல் கேட்ட சத்தம்
சிங்களம் சாதித்தது என்று
மஹிந்த விமான நிலையத்தில்
போட்டது முத்தம்.
அயல் நாடுகளில் வாழ்வதா
தமிழன் அகதியாய்....
எழு எரிமலையாய் எழுந்திடு புயலாய்.
அமெரிக்காவின் கழுகுப் பார்வையால்
அநியாயங்கள் கண்டெடுக்கப்பட்டு
ஜெனிவாவில் கிடைத்தது தீர்ப்பு.
இனி ஒவ்வொரு தமிழனுக்கும்
இருக்க வேண்டும் தமிழீழம்
என்னும் எதிர்பார்ப்பு..

உனக்கு நான் 




