குட்டிக் கவிதை

ஒரு சொல் போதும் பெண்ணே

29, May 2012
Views 2402

நான் உறங்கினாலும் என்
இதயம் உறங்கவில்லை
என் உள்ளத்தில் நீ உறைந்து என்
உறக்கத்தை ஏன் கலைக்கின்றாய்

பெண்ணே நீ என்னை
காதலிக்கிறாய் என்று
ஒரு வார்த்தை
சொல் பெண்ணே

அந்த ஒரு சொல்லோடு - நான்
இந்த பூமியில் உயிர் வாழ்வேன்
அந்த ஒரு சொல்
போதும் பெண்ணே....