ஏனையவை

!!! ஒரு அவலையின் அழுகுரல் !!!

சிந்து.எஸ்
19, November 2011
Views 85402

உற்றவர்களும் பெற்றவர்களும்
உயிரோடு இருந்தும் அரவணைக்க யாருமின்றி
உதறிவிட்ட நிலையில் உறவின்றி
உருக்குலைந்த என்னை

அநாதை என்று அனைவரும் அழைக்க
அடங்கியே போனது என் துடிப்பு
அதிஸ்ரம் அற்றவள் என்று
அயலவர்கள் அழைக்க
அழுதே போனது என் பொழுது

அவலை வாழ்வை மறந்து
அன்னை மடி தேடினேன்
அன்னை தந்தை இருந்தும்
அன்னை மடியில்லா அநாதையானேன்

இதயம் பூஜிக்கும் காதலின்
வேள்வியில் நான் பிறந்தேனா?இல்லை
காதல் எனும் பெயரில்
காமத்தை நேசித்ததால்
இன்றியமையா துன்பத்தில் நான் பிறந்தேனா ?

கவலையில் வாடுவாள் தாய் என்று
கலங்கிய படியே கடவுளிடம் வேண்டினேன்
காட்டிவிடு என் தாயை என்று
காலத்தின்  கோலம் என்று எண்ணி
கண்ணீருடன் வாழ்ந்தேனே

காதலை நான் நேசிக்கையிலே
கண்டு கொண்டேன் தாயே
கடல் கடந்து நீ வாழ்வதை
கடைசியில் நான் உணர்ந்து கொண்டேன்
கவலையின்றி கலப்புடன் நீ இருப்பதையும்

பாசத்தாய் நீ என்றால் உன் தாய்மையை உணர்த்திய
பாவியிவள்தான் என்றால்
பாரினிலே பல காலம் நீ வாழும் போது
பரிதவித்த இந்த அவலையின் அழுகுரல்
பாசத்தாய்க்கு கேட்கவில்லையா? புரியவில்லையா?

தாகங்கள் தீர்க்க எனை  தனிமையில்
நீங்கள் தவிக்க விட்டு செல்ல
நான் செய்த தவறென்ன தாய் தந்தையே......