Poem of the day

மீண்டொரு புரட்சி…

கன்னடம் முன்னிடம்
சிங்களம் முன்னிடம்
தமிழனை வதைப்பதிலே

தன்னலம் முன்னிடம்

புரட்சி கவிதை Inthiran 28, September 2016 More

காதல் கவிதை

எனக்கெனவே நீயும்

த.தர்ஷன்
06, May 2010
Views 52904

உன் நிழலில்
உட்கார்ந்திருந்தேன்
என் ஆயுள் கூடுதடி

உன் உயிரில்
உறைந்திருந்தேன்
அது நூறுஜென்மம் ஆகுதடி

உன் தெருப்பக்கம் இருந்தால் -தினம் தினம்
எனைத்தாண்டி செல்கிறாய்
உன் மனப்பக்கம்  இருந்தால் -கணம் கணம் 
நினைவாலே அணைக்கிறாய் 

என் காதலுக்கு
உன் உயிரை கொடுத்தாய்
என் கவிதைகளுக்கு
உன் ஆயுள் கொடுத்தாய்

என்னை மறுஜென்மம்
எடுக்க வைத்தாய்
எத்தனை முறை நான் பிறந்தாலும்
எனக்கெனவே நீயும் பிறக்கின்றாய்